18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அணைப்பட்டியில்  வீர ஆஞ்சநேயர் கோயிலில்ஆடி அமாவாசையை முன்னிட்டு  பக்தர்கள் திரண்டனா்.

அணைப்பட்டியில்  வீர ஆஞ்சநேயர் கோயிலில்ஆடி அமாவாசையை முன்னிட்டு  பக்தர்கள் திரண்டனா்.

எழுதியவர்: mohan August 1, 2019, 6:00 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மாலப்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து நேற்று அதிகாலை பெருமாள் குதிரை வாகனத்தில் அமர்ந்து ஊர்வலம் தொடங்கியது. பின்னர் பிள்ளையார்நத்தம் , செக்கா பட்டி ,சிறு நாயக்கன் பட்டி,சொக்கு பிள்ளை பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மண்டகப்படிகளில் ஏற்று நேராக அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் மண்டகப்படிகளில் அமர்ந்து பொது மக்களுக்கு அருள்பாலித்தார்.

அணைப்பட்டி ஒட்டி வைகை ஆற்றுப் படுகை செல்வதாலும் வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருப்பதாலும் திண்டுக்கல் தேனி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் திரளாக திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி செலுத்தி வழிபட்டனர்.அதே போல்அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் அருகே அமைந்துள்ள சித்தர்கள் மலையில் உள்ள மகாலிங்கம் கோயிலுக்குச் சென்று அங்கு பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாக பொதுமக்களுக்கு தேவையான சுகாதார மற்றும் குடிநீர் பணியை பிள்ளையார்நத்தம் ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி தலைமையில் செய்திருந்தனர். நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் சப் இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!