18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பன் கடலில் விடப்பட்ட உயிர் கடல் அட்டைகள்

பாம்பன் கடலில் விடப்பட்ட உயிர் கடல் அட்டைகள்

எழுதியவர்: mohan August 1, 2019, 4:46 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் குனசேகரன், வனக்காப்பாளர் கோவிந்தராஜ், காளிதாஸ் உள்ளிட்ட வன பணியாளர்கள் வேதாளை கடற்கரை பகுதியில்  ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில் சாக்க பிளாஸ்டிக் கேனில் உயிருடன் கடல் அட்டைகள் இருப்பதை பார்த்தனர். 50 கிலோ மதிப்பிலான கடல் அட்டைகளை கைப்பற்றி, மண்டபம் வனச்சரக அலுவலகம் எடுத்து வந்தனர். இது தொடர்பாக கடல் அட்டைகளை விற்பனைக்காக சேகரித்த வியாபாரி குறித்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தல் படி கைப்பற்றிய உயிர் கடல் அட்டைகளை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் பாம்பன் கடலில் இன்று மாலை விட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!