18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கு 100நாள் வேலை வழங்காததை கண்டித்து சாலை மறியல்.

உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கு 100நாள் வேலை வழங்காததை கண்டித்து சாலை மறியல்.

எழுதியவர்: mohan August 1, 2019, 4:37 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் 100நாள் தேசிய ஊரக வேலைவளர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்கள், கால்வாய்கள், ஓடைகள், குட்டைகள் போன்றவைகளை தூர்வாறும் வேலை அப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு 100 நாள் வேலை வழங்கவேண்டுமென ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து வந்தனர். இதுவரை அதிகாரிகள் இவர்களுக்கு 100நாள் வேலை வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குஞ்சாம்பட்டி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 100நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!