18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெங்கு விழிப்புணர்வு முகாம்

டெங்கு விழிப்புணர்வு முகாம்

எழுதியவர்: mohan August 1, 2019, 1:22 pm

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் சண்முகநாதபுரம் சிவக்குமார் ,திருவேகம்பத்துர் முத்துவேல்,தொழுநோய் மேற்பார்வையாளர் செல்வம்,செவிலியர் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை 6வது வார்டு நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துவடிவு டெங்கு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.

அவர் பேசுகையில்,காய்ச்சல் வந்தால் கடைகளுக்கு சென்று நீங்களே மாத்திரை வாங்கி போட்டு சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.எந்தவொரு காய்ச்சலாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.டெங்கு காய்ச்சல் குணப்படுத்தக்கூடியதுதான்.அதற்கு சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.என்று பேசினார்.நிகழ்வில் டெங்கு அறிகுறிகள் சார்ந்த விழிப்புணர்வு வீடியோ காண்பிக்கப்பட்டது.மாணவி நதியா கைகழுவும் முறை குறித்து விளக்கினார்.மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!