17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » சொகுசுக் கப்பலில் தீ விபத்து; 3 பேர் உடல் கருகி பலி..!

சொகுசுக் கப்பலில் தீ விபத்து; 3 பேர் உடல் கருகி பலி..!

எழுதியவர்: mohan August 1, 2019, 12:54 pm

இந்தோனேசியா நாட்டின் ஹரிமுன் மாவட்டத்தில் கப்பல் பழுது பார்க்கும் தளம் ஒன்று உள்ளது. இங்கு, தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தொழிலாளர்கள் சிலர் இன்று (31ம் தேதி) அந்த கப்பலில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கப்பலின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், கப்பலில் இருந்த தீயணைப்பான் கருவிகள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்றின் வேகத்தால் தீ மளமளவென கப்பல் முழுவதும் பரவியது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.’கப்பலில் பழுது நீக்கும் பணியில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது குறித்த முழு விவரம் தெரியாததால், மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெறும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!