இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1000/-ம், 6 முதல் 8 வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3,000/-ம்,9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4,000/-ம் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,000/-ம், உயர்கல்வி (முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி, மருத்துவம்) பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7,000/-ம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிப்பவர்கள் இதர அரசுத் துறைகள் மூலம் கல்வி உதவித் தொகை பெற்றிருத்தல் கூடாது. கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவ,மாணவியர்கள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் .மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தகவல்.
எழுதியவர்: mohan August 1, 2019, 9:58 am




You must be logged in to post a comment.