17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

எழுதியவர்: mohan August 1, 2019, 9:46 am

மதுரை தத்தனேரியைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் நாகராஜன், 34. இவர் கடந்த 2011ல் தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தார். 2016ல் இராமநாதபுரம் ஆயுதப்படை வீரராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 2019 பிப்ரவரி மாதம் விடுப்பு எடுத்த இவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. குடும்ப பிரச்னையால், அவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் தனிமையில் வசித்த நாகராஜன் இன்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேணிக்கரை போலீசார் போலீசார் உடலை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!