இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பெற்றோர் திட்டியதால் கோபித்துக் கொண்டு பேருந்தில் பரமக்குடிக்குச் சென்றார். பரமக்குடி பேருந்து நிலையத்தில் கடந்த 2014 ஜூலை 1 ஆம் தேதி அதிகாலை சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருந்தார். அப்போது, சிவகங்கை மாவட்டம் உடையநாதபுரம் அழகு மகன் செல்வராஜ் 25, அங்கு வந்தார். செங்கல் சூளை தொழிலாளியான செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி அருகே உள்ள சந்தை கடை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு மறைவான இடத்திற்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த செல்வராஜ், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இது தொடர்பாக சிறுமி புகார்படி பரமக்குடி மகளிர் போலீசார், போக்ஸோ, கொலை மிரட்டல், தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, செல்வராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு இராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் நேற்று நடந்த இறுதி விசாரணையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த செல்வராஜூரக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 அபராதம் விதித்தார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
சிறுமி பாலியல் பலாத்காரம் : சிவகங்கை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
எழுதியவர்: mohan August 1, 2019, 9:37 am




You must be logged in to post a comment.