மதுரை நரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டு பாட்டில் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் 5 க்கும் மேற்பட்டோர் மதுரை அடுத்த நாராயணபுரத்தில் உள்ள நாகனா குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.பத்தாம் வகுப்பு படிக்கும் தியாகேஸ் மற்றும் ஹரிஷ், பாலச்சந்தர் ஆகிய மாணவர்கள் குளத்து நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.குளத்தில் சகதி அதிகமாக இருந்ததால் தியாகேஸ் உட்பட 3 மாணவர்கள் சகதியில் சிக்கினா்.இவா்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்பு பணியில் இறங்கினர்.ஹரிஸ், பாலச்சந்தர் மீட்கப்பட்டார். தியாகேஸ் நீரில் மூழ்கியதால் காப்பாற்ற முடியவில்லை.தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து குளத்தில் மூழ்கி இறந்த தியாகேஸை மீட்டனர்.
மதுரை அருகே பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பலி
எழுதியவர்: mohan July 31, 2019, 6:40 pm




You must be logged in to post a comment.