17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாதுகாப்பில்லாத வைகை ஆற்று சா்விஸ்ரோடு

பாதுகாப்பில்லாத வைகை ஆற்று சா்விஸ்ரோடு

எழுதியவர்: mohan July 31, 2019, 6:30 pm

மதுரை மாவட்டம்முனிச் சாலை இஸ்மாயில்புரம் பின்புறம்  சர்விஸ் ரோடு உள்ளது.இப்பகுதியில் சுமாா் 2 கிமீட்டா் துராம் யானைக்கல் கீழ் பாலம் முதல் தெப்பக்குளம் வரை வைகை ஆற்றை ஒட்டி தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் இருபுறமும் வசிப்பவா்கள் ஜன்னல், கதவு, கட்டை, கம்பி, போன்ற பழைய இரும்புக்கடையில் இருக்கும் சாமான்களை வைகை ஆற்றின் கரையில் போட்டுள்ளனா்.

இதனால் வாகனங்களில் அப்பகுதியில் செல்வோா் மிகுந்த சிரமத்திற்கிடையில் செல்ல வேண்டியுள்ளது.மேலும் யானைக்கல் கீழ் பாலம் முதல் தெப்பக்குளம் வரை தெருவிளக்கு இருந்தும்எரியாத காரணத்தால் இரவில் அப்பகுதியில் செல்வதற்கு பொதுமக்கள் பயப்படுகின்றனா்.மேலும் வெளிச்சம் இல்லாததால் குடிமகன்கள் ரோட்டிலேயே மயங்கி விழுந்து கிடப்பதால் பெண்கள் இரவில் அப்பகுதியில் செல்ல  அச்சப்படுகின்றனா்.எனவே இதுகுறித்து மாநகராட்சி அதிகாாிகள் மற்றும் காவல்துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!