இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
கவுரவக் கொலை தடுப்பு சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது.கவுரவ கொலை தடுப்பு சிறப்பு பிரிவை 83000 31100 என்ற எண்ணில் 24 மணி நேரமும் உதவிக்கு அழைக்கலாம்.கலப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கு சமுதாய ரீதியாக இழைக்கப்படும் துன்புறுத்தல் தொடர்பான புகார் மனுக்கள் 24 மணி நேரமும் பெறப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.ஜாதி, மத ரீதியான கலப்பு திருமணங்களை எதிர்ப்பதும் தடுப்பதும் சட்டப்படி குற்றமாகும்…21வயது நிறைவடைந்த ஆண், 18 வயது நிறைவடைந்த பெண் கலப்பு திருமணம் செய்வதை எதிர்ப்பது குற்றமாகும்.கலப்பு திருமணம் செய்து கொண்டோருக்கு குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு இருந்தால் காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கலப்புத் திருமணம் செய்து கொண்ட ஆண், பெண் குடும்பத்தினருக்கு கலந்தாய்வு மூலம் சுமூகமாக சேர்ந்து வாழ அறிவுரை வழங்கப்படும் உள்ளிட்ட என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இராமநாதபுரத்தில் போலீசார் விழிப்புணர்வு
எழுதியவர்: mohan July 31, 2019, 5:06 pm




You must be logged in to post a comment.