17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கட்டிட வரைபட அனுமதி வழங்க 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் கைது.

கட்டிட வரைபட அனுமதி வழங்க 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் கைது.

எழுதியவர்: mohan July 31, 2019, 3:58 pm

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ். மதுரை காதக்கிணறு பகுதியில் உள்ள இவருடைய உறவினருக்கு சொந்தமான 3 செண்டு இடத்தில் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி பெறுவதற்காக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.நீண்ட நாட்களாகியும் வரைபட அனுமதி வழங்காத நிலையில்  அலுவலகம் சென்று கேட்டபோது அலுவலக உதவியாளர் ராமநாதன்  தனக்கு 12 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் வரைபட அனுமதி வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெகதீஷ் மதுரை இலஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து இலஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் , ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ராமநாதனிடம் கொடுக்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டார்.இதுகுறித்து தற்போது மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.

வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!