17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » இராமநாதபுரம் வேலு மாணிக்கம் மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் துவக்கம்

இராமநாதபுரம் வேலு மாணிக்கம் மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் துவக்கம்

எழுதியவர்: mohan July 31, 2019, 3:30 pm

இராமநாதபுரம் வேலு மாணிக்கம் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடந்த யூத் ரெட் கிராஸ் தொடக்க விழாவிற்கு கல்லூரி தலைவர் வேலு.மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். முதல்வர் காஞ்சனா வரவேற்றார்.

யூத் ரெட் கிராஸ் பதாகையை காரைக்குடி அழகப்பா பல்கலை., யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி.விநாயக மூர்த்தி வழங்கினார். ரெட் கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுனாண்ட் உருவ படத்தை இராமநாதபுரம் ரெட் கிராஸ் சேர்மன் எஸ்.ஹாரூண் வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் எம். ராக் லாண்ட் மதுரம், பசுமை ரெட் கிராஸ் அமைப்பாளர் ஏ.மலைக்கண்ணன் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் நட மரக்கன்றுகளை வழங்கினர். யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், புரவலர் உலகராஜ், கீழக்கரை தாலுகா ரெட் கிராஸ் செயலர் சுந்தரம், ஆயுட்கால உறுப்பினர் முத்து கருப்பன் பேசினர். கல்லூரி ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலர் விழி நன்றி கூறினார். கல்லூரி பேராசிரியைகள், மாணவியர் ஏற்பாடுகளை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!