18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு சாவு

நிலக்கோட்டை அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு சாவு

எழுதியவர்: mohan July 31, 2019, 11:54 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பிள்ளையார் நத்தத்தை சேர்ந்த முத்து  53. இவர் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் வெறுத்துப்போன முத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முத்துவை நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.இது குறித்து விளாம்பட்டி போலீசில் அவரது மகன் சுரேஷ் கொடுத்த புகாரின் படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!