17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக ஆட்டுவியாபாரி வெட்டிக்கொலை

உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக ஆட்டுவியாபாரி வெட்டிக்கொலை

எழுதியவர்: mohan July 31, 2019, 9:53 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (50).இவர் உசிலம்பட்டி பகுதியில் ஆட்டுவியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினரான ஆசை என்பவருக்கும் ஆட்டுவியாபாரத்தில் பணம் கொடுக்கல் ;வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில்; ஆசை உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கறிக்கடையில் கறி வாங்குவதற்காக நின்று கொண்டிருந்த முனியாண்டியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.ஆவேசமடைந்த ஆசை கறிக்கடையிலிருந்த அரிவாளை எடுத்து சராமரியாக முனியாண்டியை வெட்டியுள்ளார்.இதில் முனியாண்டி சம்பவஇடத்திலேயே பலியானார்.சம்பவமறிந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசையைக் கைது செய்து முனியாண்டியின் உடலைக்கைப்பற்றி பிதேர பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் உசிலம்பட்டிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!