18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு படிப்படியாக வழங்கப்படும் – பொதுமக்கள் பயப்பட வேண்டாம் – வட்ட வழங்கல் அலுவலர் அறிவிப்பு

கீழக்கரையில் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு படிப்படியாக வழங்கப்படும் – பொதுமக்கள் பயப்பட வேண்டாம் – வட்ட வழங்கல் அலுவலர் அறிவிப்பு

எழுதியவர்: keelai April 1, 2017, 11:00 am

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு இன்று ஏப்ரல் 1 முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு படிப்படியாக வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும். அதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் என்று ‘மெசேஜ்’ வரும். அதன் பிறகு மக்கள் வந்தால் போதும்.

மெசேஜ் வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம்.எனவே கார்டு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பதட்டப்பட வேண்டாம். கார்டு தயாரானதும் உங்கள் செல்போனுக்கு கண்டிப்பாக மெசேஜ் வரும். அதன் பிறகு ஒரு வாரத்திற்குள் ரே‌ஷன் கடைக்கு வந்தால் போதும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!