திண்டுக்கல், தோட்டனூத்து அருகே உள்ள மேட்டூர் காலனியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் மணி .இவர் திண்டுக்கல்லில் சொந்தமாக கட்டிட கான்ட்ராக்ட் பிடித்து வேலை செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாக மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு கிளம்பி வந்தவர். எங்கு சென்றார் என்று கண்டுபிடிக்க முடியாததால் கௌரி திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனுத்து கரட்டுபகுதியில் ஒரு மொபட் தனியாக நின்று இருந்ததையும், அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் ஒரு வாலிபர் பிணம் தூக்கில் தொங்குவதும் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மணியின் பிணத்தை எடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தூக்கு போட்டு இறந்த மணிக்கு ஒரு ஆண் குழந்தையும் , கௌரி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
நிலக்கோட்டை அருகே கட்டிட ஒப்பந்ததாரர் தூக்கு போட்டு தற்கொலை
எழுதியவர்: mohan July 29, 2019, 5:21 pm




You must be logged in to post a comment.