17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

நிலக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 29, 2019, 4:45 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கழகத் தலைவர் ஜான் பாண்டியனை ஒருமையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும், திமுக கழகப் பொருளாளர் துரைமுருகனை கண்டித்தும் ஒன்றிய தலைவர் ராஜலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, ஒன்றிய பொருளாளர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.          ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவரை ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது, இச்சம்பவத்தை உருவாக்கிய திமுகவினர் மன்னிப்பு கேட்க கோரியும், இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டமாக சென்னையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாகவும் கோஷங்கள் எழுப்பினர்..         இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் முருகவேல் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.. மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ராஜபாண்டியன்,ராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.. முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!