17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குப்பைத்தொட்டியால் தொற்றுநோய் அபாயம்

குப்பைத்தொட்டியால் தொற்றுநோய் அபாயம்

எழுதியவர்: mohan July 29, 2019, 10:27 am

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பெரியகுளம் புதுப்பாலம் செல்லும் வழியில் தென்கரை கிளை நூலகம் எதிரே குப்பை தொட்டி (பெட்டி) வைக்கப்பட்டுள்ளது. இக் குப்பைத்தொட்டியில் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு , தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இக்குப்பைத்தொட்டியை அகற்றி அரசு மதுபானக் கடை அருகிலோ, அல்லது பொது மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வேறொரு இடத்திலோ வைத்து நகரின் தூய்மை காக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!