18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழை நியூஸ் குழுமத்தின் இரங்கல் செய்தி.

கீழை நியூஸ் குழுமத்தின் இரங்கல் செய்தி.

எழுதியவர்: mohan July 29, 2019, 10:18 am

சத்தியப்பாதை புலனாய்வு இதழின் ஆசிரியரும் கீழை நியூஸ் குழுமத்தின் நிறுவனருமான திரு “சையது ஆப்தீன்” அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.”தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” தென் மண்டல செயலாளரும் தஞ்சை தமிழன் டிவி நிருபருமான “திருஞானம்” அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.!

இனிமையான நண்பர் தான் சார்ந்த துறைகளில் சுறுசுறுப்பாகவும் எல்லோரிடத்திலும் மிகவும் கனிவாக அன்பாக பேசக்கூடியவர் திருஞானம் அவர்கள் என்பதை அறிந்தேன். அன்னாரின் திடீர் மறைவு அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரோடு துக்கத்தில் நாமும் பங்கெடுத்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.மூத்த பத்திரிகையாளர், தஞ்சை தமிழன் டிவி செய்தியாளர், தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின், தென் மண்டல செயலாளர் தோழர் திருஞானத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு சத்தியப்பாதை மற்றும் கீழை நியூஸ் நிர்வாகிகள் நிருபர்கள் ஆசிரியர்கள் மற்றும் குழுமத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு தனது இரங்கல் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.!

இவன்:

ஜெ.அஸ்கர்.

முதன்மை ஆசிரியர்

சத்தியப்பாதை புலனாய்வு இதழ் மற்றும் கீழை நியூஸ் குழுமம்.!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!