17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் 80 வயது முத்து விழா..

இராமநாதபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் 80 வயது முத்து விழா..

எழுதியவர்: ஆசிரியர் July 28, 2019, 10:28 pm

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ச.ராமதாஸ் 80 வயது முத்து விழா பொதுக் கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட பாமக சார்பில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் சை.அக்கிம் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் தளபதி ராஜ்குமார், மாநில துணைத் தலைவர் அறிவழகன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட அமைப்பு செயலாளர் அம்ஜத் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஆயிஷா வரவேற்றார்.

அதை தொடர்ந்து மாணவர் சங்க மாநில செயலாளர்கள் செஞ்சி ரவி, ஸ்ரீராம், இளைஞர் ஜமாத் மாநில தலைவர் வதிலை நசீம் சிறப்புரை ஆற்றினர். மாணவர் சங்க மாநில துணைச்செயலாளர் முகமது ஆசிக் நன்றி கூறினார். நகர் செயலாளர்கள் தாரிக் (இராமநாதபுரம்), லோகநாதன் (கீழக்கரை) ஏற்பாடு செய்தனர். ஒன்றிய செயலர்கள் ஜெமில் கான் (இராமநாதபுரம் ), இருளாண்டி (கடலாடி), ராஜேந்திரன் (திருப்புல்லாணி, மேற்கு), இராமேஸ்வரம் நகர் செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!