18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் கலாம் நினைவு தினம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்..

இராமநாதபுரத்தில் கலாம் நினைவு தினம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்..

எழுதியவர்: ஆசிரியர் July 28, 2019, 10:22 pm

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் குழுமம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

கலாமின் லட்சியங்களை அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவரின் உருவ படத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழங்கினார். குரு நன்றியுரை கூறினார் .

இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் கலாம் அய்யனார் செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!