18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » கனமழையால் மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கனமழையால் மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

எழுதியவர்: mohan July 27, 2019, 9:38 pm

மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் பருவமழை தீவிரம் அடைந்தது. இதில் தொடர்ந்து 5 நாட்கள் மழை கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியானார்கள். அதன்பின்னர் இயல்பு நிலை திரும்பியிருந்தது. மும்பை மற்றும் புறநகரில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. நாள் முழுவதும் பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.கனமழையால் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது. வெளுத்து வாங்கிய மழையால் ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. பட்லாப்பூர் ரெயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த மார்க்கத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கனமழை காரணமாக கோபோலி பகுதியில் உள்ள பாலி சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!