17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » முகலாயர் காலத்தைச் சேர்ந்த 698 நாணயங்களை உத்தரப்பிரதேச மாநில போலீசார் மீட்டுள்ளனர்.

முகலாயர் காலத்தைச் சேர்ந்த 698 நாணயங்களை உத்தரப்பிரதேச மாநில போலீசார் மீட்டுள்ளனர்.

எழுதியவர்: mohan July 27, 2019, 9:31 pm

மொராதாபாத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான குலாம் நபி என்பவர் தனது பணியாளர்களுடன் சேர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் சிம்லாவில் ஒப்பந்தப் பணி ஒன்றுக்காக குழி தோண்டும் போது சுமார் 8 கிலோ எடையுள்ள இந்த வெள்ளி நாணயங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறதுஇந்நிலையில் பணி முடிந்து மொராதாபாத்துக்கு திரும்பிய அவர்களிடையே அந்த நாணயங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினரால் இந்த விவகாரம் காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் நாணயங்களை கைப்பற்றினர்16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக்கு இடைப்பட்ட இந்த நாணயங்களில் பேரரசர்கள் அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் காலத்து நாணயங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!