18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » 700 பயணிகளுடன் மும்பை வெள்ளத்தில் சிக்கிய எக்​ஸ்பிரஸ் ரயில்

700 பயணிகளுடன் மும்பை வெள்ளத்தில் சிக்கிய எக்​ஸ்பிரஸ் ரயில்

எழுதியவர்: mohan July 27, 2019, 9:27 pm

மகாராஷ்ட்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் 15 செ.மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் பதல்பூர் பகுதியில் சென்று கொண்டு இருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதனால் ரயில் உள்ள 700 பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு, ராணுவம்,காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பயணிகளை மீட்டு வருகின்றனர். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் இதுவரை 20க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!