17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய குடிநீா் குழாய் அமைக்க பழைய குடிநீா் குழாயை உடைத்த பணியாளா்கள்

புதிய குடிநீா் குழாய் அமைக்க பழைய குடிநீா் குழாயை உடைத்த பணியாளா்கள்

எழுதியவர்: mohan July 27, 2019, 1:01 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி உள்ள  நாலு ரோடு அருகே இருந்து நடராஜபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக சாலையின் நடுவில் ஜேசிபி இயந்திரம் மூலமாக  புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது.இந்நிலையில்  நிலக்கோட்டை திண்டுக்கல் சாலையில் உள்ள சங்கரன் சிலை குடிநீர் குழாய் அமைப்பதற்காக குழி தோண்டியபோது  ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த நீர் குழாய் உடைக்கப்பட்டதால் அதிலிருந்து தண்ணீர் பீறிட்டு அதிகளவில் வெளியே வந்தது.. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு உடனடியாக குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டும் பணியை நிறுத்தும்படி கூறினர். உடனடியாக பேரூராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து அங்கிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனை ஏற்று தற்சமயம் பணி நிறுத்தப்பட்டது.  தண்ணீர் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாகிப் போனது குறிப்பிடத்தக்கது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!