17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புள்ளிகளால் அப்துல் கலாம் ஓவியம் வரைந்து பள்ளி மாணவர்கள் அசத்தல்..!

புள்ளிகளால் அப்துல் கலாம் ஓவியம் வரைந்து பள்ளி மாணவர்கள் அசத்தல்..!

எழுதியவர்: mohan July 27, 2019, 12:21 pm

பழனி அருகே, 780 மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் புள்ளிகளால் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உருவத்தை வரைந்துள்ளனர்.மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று (27.07.19)கடைபிடிக்கப்பட்டது. இதைமுன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள புஷ்பத்தூர் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி ஓவிய ஆசிரியர்கள் சோலை அபிராமி, கணேஷ், கரன், ஒருங்கிணைப்பாளர் பக்ருதீன் ஷெரிப் வழிகாட்டுதலில் புள்ளி ஓவிய முறையில் கலாம் ஓவியத்தை வரைந்துள்ளனர்.

பள்ளியின் 780 மாணவர்கள் இணைந்து, மூன்று நாட்கள் உழைப்பில் மொத்தம் ஒரு லட்சம் புள்ளிகளில் 30 அடி உயரம், 20 அடி அகலத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில், ‘கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல… உங்களை தூங்கவிடாமல் செய்வது’ என்ற அவரது பொன்மொழியையும் எழுதியுள்ளனர்.ஓவியம் வரைந்த மாணவர்களை பள்ளியின் நிர்வாகி சுவாமிநாதன், முதல்வர் வசந்தா, ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!