17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » கண்துடைப்பிற்காக சாய்வுதளம் அமைத்து மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் SBI வங்கிக்கு TARATDAC கடும் கண்டனம்…

கண்துடைப்பிற்காக சாய்வுதளம் அமைத்து மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் SBI வங்கிக்கு TARATDAC கடும் கண்டனம்…

எழுதியவர்: mohan July 27, 2019, 12:00 pm

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் அனைத்து பொது இடங்களுக்கும் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து தர வேண்டும் என கடந்த 2013ம் ஆண்டு அரசானை எண் 21ஐ வெளியிட்டது.தமிழக அரசின் அரசாணைப்படி திண்டுக்கல்லில் உள்ள நேருஜி நகர் SBI வங்கிக்கிளையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்துள்ளார்கள்.பொதுவாக அனைத்து இடங்களிலும் சாய்வுதளம் குறைந்தது மூன்று அடி அகலத்தில் படிக்கட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் நீளமாக அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால், இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் ஒரு அடி அகலத்தில் நேருஜி நகர் SBI வங்கியில் செயல்படும் ATM மையத்திற்கு சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கு நுழையும் இடத்தில் மிகவும் செங்குத்தாக அதுவும் அடைக்கப்பட்ட வங்கிக்கதவை நோக்கி மற்றொரு சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாய்வுதளம் மாற்றுத்திறனாளிகளின் எளிதாக வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டதா? அல்லது நாங்களும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சாய்வுதளம் அமைத்துள்ளோம் என கணக்கு காண்பிப்பதற்காக அமைக்கப்பட்டதா? என தெரியவில்லை.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு வங்கியிலும், ATM மையத்திலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல முடியாத வகையில் தங்குதடையற்ற சூழலை உருவாக்காமல் வைத்துள்ளார்கள்.

சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ள ஒன்றிரண்டு இடங்களிலும் இதுபோன்று கண்துடைப்பிற்காக வைத்துள்ளார்கள்.இவ்வாறான சாய்வுதளங்கள் அமைப்பது என்பது மாற்றுத்திறனாளிகளை கேவலப்படுத்தும் செயலாகும்.எனவே,உடனடியாக அனைத்து வங்கிகளிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அரசு விதிமுறைகளின்படி அமைக்க வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் TARATDAC சங்கத்தின் சார்பில் அனைத்து வங்கிகளின் முன்னாலும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு மாற்றுத்திறனாளிகள் தள்ளப்படுவார்கள் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!