18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை அருங்காட்சியகத்தில் போட்டித்தேர்வுக்கு தயார் படுத்துதல் குறித்த அறிமுக வகுப்பு

நெல்லை அருங்காட்சியகத்தில் போட்டித்தேர்வுக்கு தயார் படுத்துதல் குறித்த அறிமுக வகுப்பு

எழுதியவர்: mohan July 27, 2019, 11:54 am

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ மாணவிகள் போட்டி தேர்விற்கு தங்களை தயார் படுத்திக்கொள்வது பற்றிய அறிமுக வகுப்பு 25.07.19 வியாழன் அன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழ் செம்மல் பே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். திருநெல்வேலி , புற நகர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜமால் முகமது ஈஷா முன்னிலை வகித்தார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி அனைவரையும் வரவேற்றார்.

இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர் பிச்சம்மாள் ஆறுமுகம் ,தமிழக அரசு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.தமிழக அரசின் போட்டி தேர்வு பயிற்சி மையத்தின் முனைவர். ஜே.ஸ்டெல்லா அவர்கள் கலந்து கொண்டு போட்டி தேர்வில் வெற்றி பெற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.ஆறுமுகம், முகமது சான்ஷா, கவிஞர். சுப்பையா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்,மகளிர் ஆகியோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!