இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மருதன் தோப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் இவரது மகன் கோகுல் வயது(20) இவர் கீழக்கரையில் இயங்கி வரும் தண்ணீர் விற்பனை செய்யும் ( டிராக்டர் ) தனியார் வாகனத்தில் கிளீனராக வேலை செய்து வருகிறார்.இவர் டிராக்டர் வாகனத்தில் ஓட்டுனருடன் மருதன் தோப்பு பகுதியில் இன்று இரவு 8 மணி அளவில் வீடுகளுக்கு தண்ணீர் விற்பனை செய்து கொண்டிருந்த போது வாகனத்தை பின்னால் எடுப்பதற்காக ஓட்டுனர் முயன்றபோது
பக்கத்தில் இருந்த வீட்டின் முகப்பில் இருந்த கழிவு நீர் தொட்டியின் மேல் கவனக்குறைவால் வாகனம் ஏற்றியதும் நிலை தடுமாறி பின்னாலிருந்த கோகுலின் மேல் மோதிவிட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார் இவரது உடல் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு நாசா தனியார் தொண்டு நிறுவன வாகனத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் மார்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து சம்பந்தமாக கீழக்கரை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
கவனக்குறைவால் விபத்து
எழுதியவர்: mohan July 27, 2019, 11:28 am




You must be logged in to post a comment.