18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » எல்கே ஜி, யுகே ஜி, மழலையர் மாணவர்கள் நீல வண்ண நாள் நிகழ்ச்சி

எல்கே ஜி, யுகே ஜி, மழலையர் மாணவர்கள் நீல வண்ண நாள் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan July 26, 2019, 1:20 pm

இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்கே ஜி, யுகே ஜி, மழலையர் மாணவர்கள் நீல வண்ண நாள் நிகழ்ச்சி பள்ளி முதல்வர் திரு நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

எல்கே ஜி, யூகே ஜி, மழலையர்கள் அனைவரும் நீல வண்ண உடையணிந்து தாங்கள் அன்றாடம் வீட்டில் பயன்படுத்திய மற்றும் விளையாட்டிற்கு உபயோகப்படுத்திய  நீலவண்ணப் பொருட்களை பள்ளிக்கு கொண்டு வந்து தங்களுடன்  பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கிடையே அப்பொருள்களின் சிறப்பு மற்றும் அந்த நீல வண்ண பொருள் எதற்கு தனக்காக தன் பெற்றோர்கள் பரிசாக வழங்கினார்கள் என எடுத்துரைத்தனர்.

 இந்நிகழ்ச்சியில் எல்கே ஜி, யூகே ஜி, மழலையர் களின் பெற்றோர்கள் கலந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் மழலையர்கள் அனைவரும்  மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி பேசி மகிழ்ந்த காட்சியை கண்டு பெருமிதம் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த எல்கே ஜி,  யூகே ஜி, ஆசிரியர்களை பள்ளி முதல்வர் பாராட்டினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!