ராமேஸ்வரத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு சட்ட விரோத மது விற்பனையை தடுக்க மது விலக்கு போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அறிவுறுத்தல் படி, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் தலைமையில் மது விலக்கு அமலாக்க போலீசார் ராமேஸ்வரம் காவல் துணை கோட்டத்தில்
சோதனை நடத்தினர். ராமேஸ்வரத்தில் மேற்கொண்ட சோதனையில் நம்புராஜன் 53, ராஜகோபால் நகர் இருளாண்டி 50, வேதாளை வலையர்வாடி வேல்முருகன் 48, குஞ்சார் வலசை அய்யம்பெருமாள் 61 ஆகியோர் சிக்கினா. இவர்களிடமிருந்து 19,550 மி.லி., டாஸ்மாக் மது பாட்டில், 2,250 மி.லி., போலி மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமேஸ்வரத்தில் போலி மது பாட்டில்கள் பறிமுதல் 4 பேர் கைது
எழுதியவர்: mohan July 25, 2019, 7:47 pm




You must be logged in to post a comment.