17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடி : ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் விஜயா தலைமையில்சிறப்பு மனுநீதி நாள் முகாம்

தூத்துக்குடி : ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் விஜயா தலைமையில்சிறப்பு மனுநீதி நாள் முகாம்

எழுதியவர்: mohan July 25, 2019, 7:41 pm

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் விஜயா தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் இன்று வருவாய்த் துறை சார்பில் கோட்டாட்சியர் விஜயா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது, இதில் கோவில்பட்டி வருவாய்த்துறை சார்பில் நூறு மனுக்களும். சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 93 மனுக்களும், என மொத்தம் 193 மனுக்கள் பெறப்பட்டது

இதில் பட்டா மாறுதல் உத்தரவு 33 நபர்களுக்கும், வீட்டுமனை பட்டா 31 நபர்களுக்கும், முதியோர் உதவித்தொகை 4 நபர்களுக்கும், பி.எம். கிசான் திட்டத்தின் கீழ்18 நபர்களுக்கும், மற்றும் விதவை உதவித்தொகை, வாரிசு சான்றிதழ், குடி மராமத்துபணி தனி குடும்ப அட்டைகள் உள்ளிட்டவை வருவாய்த்துறை சார்பில் சார்பில் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஒட்டபிடாரம் வட்டாட்சியர் ரகு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகாம சுந்தரி, துணை தாசில்தார் தங்கையா, மண்டல துணை தாசில்தார் கண்ணன், சுப்புலட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!