18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்குளம் தனியார்கல்லூரி மாணவர்கள் வனத்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி

ஆலங்குளம் தனியார்கல்லூரி மாணவர்கள் வனத்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி

எழுதியவர்: mohan July 25, 2019, 6:56 pm

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் களக்காடு முண்டன்துறை வனத்துறையினர் இணைந்து வன பகுதியினை பாதுகாக்கும் விதமாக சைக்கிளில் பல்வேறு கிராமங்களுக்கு வலம் வந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

ஆலங்குளம் சுற்று வட்டார ஊர்களிலிருந்து இலட்சக்கணக்கான பொது மக்கள் பாபநாசம் , காரையார் பகுதியில் அமைந்திருக்கும் சொரிமுத்து அய்யனார் திருகோவிலுக்கு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு செல்லும் பொதுமக்களிடம் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது, மரங்களை வெட்ட கூடாது என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.மேலும் வனப்பகுதியினை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசக பதாகைகளுடன் பேரணி நடைபெற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!