18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாற்றுத்திறனாளிகளின் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் மாபெரும் வெற்றி…

மாற்றுத்திறனாளிகளின் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் மாபெரும் வெற்றி…

எழுதியவர்: mohan July 25, 2019, 6:43 pm

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகம் தீர்க்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வநாயகம், மாநில செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி, மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திரளாக பங்கேற்றனர்.

போராட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் குறித்த காலத்திற்குள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.மேலும் இது குறித்து TARATDAC மாற்றுத்திறனாளிகளின் காத்திருப்பு போராட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!