18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கார்கில் போர் வெற்றி பாதுகாப்பு விமான ரகங்கள் மாணவர்கள் பார்வை

கார்கில் போர் வெற்றி பாதுகாப்பு விமான ரகங்கள் மாணவர்கள் பார்வை

எழுதியவர்: mohan July 25, 2019, 5:39 pm

இந்திய ராணுவத்தின் வீரத்தை போற்றும் கார்கில் போர் 20 ஆண்டு வெற்றி தினம் நாடெங்கும் நாளை கொண்டாடப்படுகிறது.கார்கில் போர் வெற்றியை நினைவுகூறும் கார்கில் ‘விஜய் திவாஸ்’ தினம் இன்றும் நாளையும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ என் எஸ் பருந்து விமான படைக்கு சொந்தமான விமானங்களை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கபட்டனர்.

இந்த விமான தளத்தில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர், ரோந்து விமானங்கள், துப்பாக்கி ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதனை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என 700க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். விமானங்கள் இயங்கும் விதம் குறித்து விமானப் படை தொழில்நுட்ப பணியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!