18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூரில் பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது,

உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூரில் பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது,

எழுதியவர்: mohan July 25, 2019, 4:46 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூரில் பாரத பிரதமர் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் விவசாயிகரளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, இதில் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர், இதனை தொடர்ந்து சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான பொருட்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்கு விவசாயிகளுக்கு பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் 2 கோடி 38 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், சிறு குறு விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி வேளாண்மை துறை இயக்குநர் புவனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி வட்டார வேளாண்மை துறை புவனேந்திரன், உதவி இயக்குநர் ராமசாமி, உத்தப்ப நாயக்கனூர் விஏஓ முத்துமணி, மற்றும் அதிகாரிகள் ராஜா டேனியல், குமார், ராஜேஷ் கண்ணன், கதிரேசன், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!