17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவ,மாணவிகளுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்

மாணவ,மாணவிகளுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்

எழுதியவர்: mohan July 25, 2019, 4:19 pm

பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் பள்ளி கலையரங்கில் மாணவ,மாணவிகளுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்.750 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.நாசரேத்;,ஜுலை.24:பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் பள்ளிகள் கலையரங் கில் மாணவ, மாணவிகளுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடை பெற்றது. இதில் சுமார் 750 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.குரும்பூர் அருகிலுள்ள பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் பள்ளி கலையரங்கில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீகணேசர் பள்ளிகளும்,நாசரேத் வின்சென்ட் டென்டல்கேர், வின்சென்ட் ஹோமியோ ஹேர் ஆகியவை இணைந்து மாணவ, மாணவிகளுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமினை நடத்தினர்.

முகாமினை பள்ளி செய லாளர் எம்,ஆர்.ஜி.சுப்பு நாடார் தலைமை வகித்து துவக்கி வைத்து பேசினார்.பள்ளி செயலாளர் துரை சுரே ஷ்ராஜ், பொருளாளர் எம்.ஆர்.ஜெகன் மோகன் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.தலைமையாசிரியர் எஸ்.வித்யாதரன் வரவேற்று பேசினார். டாக்டர் ஆ.ஆதித்யா ஹோமியோபதி மருத்துவம்குறித்து மாணவ,மாணவிகளிடையே உரை யாற்றினார்.இம்முகாமில் சுமார் 750 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில் டாக்டர் ஜெ.விமல், டாக்டர் ஜெ.வில்லிக்ஸ்டன்,டாக்டர் எஸ்.அபிஜித் சாய் சங்கர், டாக்டர் பி.றி.அசோக், டாக்டர் எஸ்.டினு, டாக்டர் ஆ.ஆதித்யா ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பணிக்க நாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளிகள் தலைவர்,செயலாளர், பொருளாளர் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!