18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சதுரகிரி மலையில்தண்ணீர் தட்டுப்பாடு :ஆடி அமாவாசையன்று பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த, தடை

சதுரகிரி மலையில்தண்ணீர் தட்டுப்பாடு :ஆடி அமாவாசையன்று பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த, தடை

எழுதியவர்: mohan July 25, 2019, 3:46 pm

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, ஆடி அமாவாசையன்று பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த, தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயர சதுரகிரி மலையில் உள்ள, சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஆடி அமாவாசை விழா, வரும் 31 ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் 27ஆம் தேதிமுதல், ஆகஸ்ட் 1 ஆம் தேதிவரை, 6 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம், அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில், போதிய தண்ணீர் இல்லாததால், மலைப்பகுதியில் முடிகாணிக்கைக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அடிவாரப் பகுதியிலேயே, முடி காணிக்கை செலுத்திவிட்டு கோயிலுக்கு வருமாறு, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெ.அஸ்கர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!