17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர்.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர்.

எழுதியவர்: mohan July 25, 2019, 3:33 pm

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று 25.7. 2019 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லா,கூட்டமைப்பின்ஒருங்கிணைப்பாளர்கள் மௌலானா முஹம்மது மன்சூர் காஷிஃபி காசிமி,அல்ஹாஜ் பஷீர் அஹ்மத்.தமுமுக பொதுச்செயலாளர் பேரா.J.ஹாஜா கனி, வெல்ஃபர் பார்ட்டி யின் SN சிக்கந்தர், உட்பட இஸ்லாமிய இயக்கம் மற்றும் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் NIA வின் ஆள் தூக்கி சட்டம் மூலம் மத்திய அரசு தமிழகத்தில் முஸ்லிம்கள் மத்தியிலே மிகப் பெரும் பதட்டத்தை உருவாக்கி கொண்டிருக்கின்ற சூழலையும் பொய்யான வழக்குகள் புனையப்பட்டு முஸ்லிம் இளைஞர்கள் ஆங்காங்கே கைது செய்யப்படுவதை கண்டித்தும் மனு அளிக்கப்பட்டது.NIA மூலம் இதுவரை நடந்த கைதுகள் 95% பொய்யானவை என நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள ஆவணங்களும் கொடுக்கப்பட்டது.

ஜெ.அஸ்கர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!