17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » ஆந்திர மாநிலம் குப்பம் அருகே ரூ 2.70 கோடி கள்ள நோட்டு பறிமுதல் போலீசார் அதிரடி

ஆந்திர மாநிலம் குப்பம் அருகே ரூ 2.70 கோடி கள்ள நோட்டு பறிமுதல் போலீசார் அதிரடி

எழுதியவர்: mohan July 25, 2019, 9:38 am

ஆந்திரமாநிலம் குப்பம் மாவட்டம் (முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதி) ராம்குப்பம் அடுத்த விஜிலாபுரம் Uகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகள் உள்ளதாக ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.உடனே விரைந்த போலீசார் திருப்பதியை சேர்ந்த 3 பேரையும் குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு நபரையும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 2 கோடியே 76 லட்சத்து 22 ஆயிரம் ருபாய் கள்ள நோட்டை பறிமுதல் செய்தனர்.இந்த கும்பல் குப்பம் மாவட்டம் சாமகுட்ட பள்ளி கிராமத்தில் வீடு எடுத்து தங்கி கள்ள நோட்டுகளை காப்பி எடுத்து வந்து உள்ளனர். இந்த மோசடி கும்பலுக்கு பெங்களூரு மற்றும் வேலூரில் கிளைகளாக செயல்பட்டு வந்து உள்ளனர்.கனிணிகள், ஜெராக்ஸ் எடுக்கும் மிஷின் ஆகியவற்றை கைப்பற்றி 6 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!