18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 24, 2019, 11:35 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் குருசாமி  முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சௌந்தரராஜன் வரவேற்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை அருகே உள்ள என். புதுப்பட்டி பழங்குடியின மக்களுக்கு கடந்த 1 ஆண்டுகளாக வழங்கப்படாத சாதிச் சான்றிதழை வழங்கக்கோரியும், கால தாமதப்படுத்தும் சூழ்நிலைய கண்டித்தும் , மாணவர்களின் நலன் கருதி உடனடியாக ஜாதிசான்று வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், மாவட்ட நிர்வாகிகள் காசிமாயன், செல்லையா, கல்யாணசுந்தரம்,  மற்றும் என். புதுப்பட்டியை சேர்ந்த  பழங்குடி இன மக்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!