18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் எலைட் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

இராமநாதபுரம் எலைட் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

எழுதியவர்: mohan July 24, 2019, 11:19 am

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் (10, பிளஸ் 2) கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, அன்றைய ஆட்சியர் நந்தகுமாரால் தொடங்கப்பட்ட எலைட் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு  ராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி  சங்கம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நோட்டு புத்தகங்கள், இன்டர்நெட் மோடம், உள்ளிட்ட பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் தலைவர் அருண், செயலாளர் விஜயபாஸ்கர், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன், எலைட் பள்ளி சிறப்பு ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!