17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » நெல்லையில் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொள்ளை கும்பலால் வெட்டிக்கொலை

நெல்லையில் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொள்ளை கும்பலால் வெட்டிக்கொலை

எழுதியவர்: mohan July 24, 2019, 11:02 am

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக ஆட்சி காலத்தில் 1996-2001 காலகட்டத்தில் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி.இவரது வீடு பாளையங்கோட்டை அரசு பாெறியியல் கல்லூரி எதிர்புறம் உள்ளது.இந்நிலையில் 23.07.19 இன்று மாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பெண் ஆகியோரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி தலைமறைவாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், மற்றும் மேலப்பாளையம் போலீசார் சென்று நேரடி விசாரணை நடத்தினர்.மேலும் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.வீட்டில் நகையை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பலை பிடிக்க செல்லும் போது வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இது குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!