18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையின் கால்பந்து விளையாட்டுப்போட்டி

வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையின் கால்பந்து விளையாட்டுப்போட்டி

எழுதியவர்: mohan July 24, 2019, 10:54 am

பனைகுளத்தில் அமைந்துள்ள பகுர்தீன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையின் சார்பில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்கள் ஜூனியர் பிரிவில் விளையாடினர். 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சீனியர் பிரிவில் கால் பந்து விளையாடினர். ஒவ்வொரு பிரிவிலும் 36 மாணவர்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையின் சார்பாக சான்றிதழ்கள் மற்றும் வெற்றி பெற்றமைக்கான டிராஃபி வழங்கப்பட்டது .இந்நிகழ்வுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார்.பாலசுப்ரமணியன் அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டு போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் தனிமனித ஆளுமை என்கின்ற தலைப்பில் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை தலைவர் டாக்டர்.கலைவாணி மற்றும் முதன்மை செயலர் டாக்டர் தஹ்மிதா பானு ஆகியோர் சிறப்புரையாற்றினர் .வில் மெடல்ஸ் ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ்தீன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .இறுதியில் பள்ளியின் சார்பாக பனைக்குளம் பகுர்தீன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நல்லதொரு வாய்ப்பு வழங்கிய வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.பல்வேறு சேவைகளை செய்து வரும் வில் மெடல்ஸ் அறக்கட்டளை அரசுப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தன்னால் இயன்ற ஊக்குவிப்பை போட்டிகள் வாயிலாகவும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!