17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மதுரையில் விரைவு ரயிலின் அடியில் சிக்கிய பெண் மீட்பு:

மதுரையில் விரைவு ரயிலின் அடியில் சிக்கிய பெண் மீட்பு:

எழுதியவர்: mohan July 24, 2019, 9:43 am

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த அனந்தபுரி விரைவு ரயில் பயணம் மேற்கொண்டிருந்த பூர்ணிமா மற்றும் இரண்டு மகன்கள் இன்று அதிகாலை 4. 50 மணிக்கு மதுரையில் நிலையத்துக்கு வந்தது மதுரை இறங்கவேண்டிய பூர்ணிமா அயர்ந்து தூங்கியதால் ரயில் புறப்படும் சில வினாடிக்கு முன் விழித்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்க முற்பட்டார் அவசரமாக இறங்கும் பொழுது ரயில் நடைமேடை க்கும் ரயிலுக்கும் இடையில் அடியில் சிக்கிய பெண் பயணிகள் கவனித்ததால் உடனடியாக ரயிலை நிறுத்திய ரயில்வே காவல்துறையினர் அவரை வெளியே எடுக்க முற்பட்டனர் உடல் சற்று பருமனாக இருந்தால் அவரை எடுக்க முடியவில்லை உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிளாட்பாரத்தை உடைத்து சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ரயில்வே காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் துரிதமாக செயல்பட்டதால் பெண் பயணி காப்பாற்றப்பட்டா.இதனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது

பயணி ஒருவர் கூறும்போது. அதிகாலை மற்றும் இரவு நேர ரயில்களில் ரயில் நிலையம் வரும் முன் 15 நிமிடத்திற்கு முன்பாக அறிவிப்பு செய்யும்படி இருந்தால் இது போன்ற விவரங்களை தவிர்க்கலாம் என ரயில் பயணி ஒருவர் தெரிவித்தார் கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போன்ற நிகழ்வு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதில் பயணித்த பயணி ஒருவர் மதுரையில் இறங்க வேண்டியவர் அயர்ந்து தூங்கிய திருமங்கலத்தில் இறங்கி விடலாம் என்று நினைத்து ஓடும் ரயிலில் இறங்கியுள்ளார் இதனால் அவர் ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டது இதனைப் போக்க ரயில் நிலையம் வரும் 15 நிமிடத்திற்கு முன்பாகவே அறிவிப்பும் ஒலிபெருக்கி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!