இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சத்திரம் கடுகு சந்தையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீமான்ராஜ் மனைவி மேக வள்ளி, 19. முதல் பிரசவத்திற்காக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்து வந்தார். பிரசவ வலி அதிகரிப்பால் நிறை மாத கர்ப்பிணியான மேகவள்ளி , சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது வயிற்றில் பனிக்குடம் உடைந்தது. ஆனால் குழந்தை பிரசவிக்கவில்லை. இதை தொடர்ந்து மேகவள்ளியை, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை பகுதியில் வந்தபோது மேக வள்ளிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு, டெக்னீசியன் நாகஜோதி மருத்துவ உதவி செய்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
நிறை மாத கர்ப்பிணிக்கு முதல் பிரசவம் 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை
எழுதியவர்: mohan July 23, 2019, 9:40 am




You must be logged in to post a comment.