18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுநல சேவையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

பொதுநல சேவையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

எழுதியவர்: mohan July 22, 2019, 7:06 pm

அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் சார்பு ஆய்வாளர் திலீபன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் .நத்தரோலி  மற்றும்  சிவகாசி மக்கள் இயக்க தலைவர் .மாரிசிவா அதன் உறுப்பினர்கள் ஆகியோர்கள் இணைந்து மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற 13 முதியவர்களை அழைத்து, அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து, நீராடவைத்து, புத்தாடைகள்  உணவுகள் வழங்கி அவர்களை பற்றி முழுமையாக விசாரணை செய்து இதில் 6 பேரை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்து உறவினர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி  வழியனுப்பிவைத்தனர்.

மேலும் 7 நபர்களை மதுரை ஒத்தக்கடையில் உள்ள மதுரை  ரோஜாவனம் அரசு முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆதரவற்ற முதியவர்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் சிவகாசி மக்கள் இயக்கத்தினரையும் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர். பொதுநல சேவையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளை காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!