18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

எழுதியவர்: mohan July 22, 2019, 1:28 pm

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் பொட்டி தட்டி ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 5, 6 வார்டு ஆதி திராவிடர் காலனியில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழாய்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தண்ணீர் விநியோகமில்லை. இதனால் அவதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 2018 ஜூலை 23 ல் மக்கள் குறை தீர் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

ஆனால் போகலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் பொட்டி தட்டி ஆதி திராவிடர் காலனி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்தவர்கள், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பெண்களிடம் போலீசார் சமரசம் பேசி அப்புறப்படுத்தினர். இதே போல் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் அ.மணக்குடி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் வந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!