17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

எழுதியவர்: mohan July 22, 2019, 10:44 am

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் பெய்த மழையால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தற்பொழுது குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலை மோதியது.சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாம் கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட நிலையில், ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தண்ணீர் அங்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!